நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்தாளில் அவர் கணவர் வெளியிட்ட உணர்ச்சிகரமான புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளையொட்டி அவர் கணவர் அபிஷேக்பச்சன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக்பச்சன் மனைவி பிறந்தநாளையொட்டி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்பச்சன் மீது சாய்ந்துள்ளார்.

அவரை கண்களை மூடிகொண்டே அணைத்துள்ளார் அபிஷேக்பச்சன்.

அந்த பதிவில், மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஐ லவ் யூ! என் மகிழ்ச்சியான இடம் என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்