அந்த இயக்குநர் மோசமானவர்.. தள்ளியே இரு என எச்சரித்தனர்: நடிகை வெளியிட்ட பகீர் தகவல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி திரைப்பட இயக்குநர் சஜித் கான் மோசமானவர் எனவும், அவரிடம் தள்ளியே இருக்க வேண்டும் எனவும் தான் எச்சரிக்கப்பட்டதாக நடிகை அம்ரிதா புரி தெரிவித்துள்ளார்.

பிரபல ஹிந்தி பட இயக்குநர் சஜித் கான் மீது பெண் பத்திரிகையாளர் உட்பட பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். அதன் பின்னர், நடிகர் அக்‌ஷய்குமார் இந்த குற்றச்சாட்டுகளை அறிந்து, சஜித் கானின் இயக்கத்தில் நடிக்கும் ‘ஹவுஸ்புல்-4’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சஜித் கான் அந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சஜித் கான் குறித்து ஹிந்தி நடிகை அம்ரிதா புரி பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘சஜித் கான் பெண்கள் விடயத்தில் மோசமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது.

சஜித் கானிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு என்னை எச்சரித்துள்ளார்கள். அப்படி இருக்கும் அவரின் குணம் பற்றி அவரின் குடும்பத்தார் மற்றும் திரைத்துறையினருக்கு தெரியாது என்பதை நம்ப முடியவில்லை’என தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டைப் பார்த்த சஜித் கானின் உறவினரும், நடிகருமான ஃபர்ஹான் அக்தர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அம்ரிதா புரியின் கோபம் நியாயமானது என்றும், ஆனால் தங்களது குடும்பம் சஜித் கானை கண்டுகொள்ளவில்லை எனும் அம்ரிதாவின் கருத்து கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers