என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்..அப்பாவை கொலை செய்தார்: பிரபல நடிகர் மீது பிக்பாஸ் நடிகை பரபரப்பு குற்றசாட்டு

Report Print Santhan in பொழுதுபோக்கு
996Shares
996Shares
ibctamil.com

என்னை சல்மான்கான் கற்பழித்தார் என்று பாலிவுட் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூஹா மிஸ்ரா பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

நடிகை தனுஸ்ரீதத்தா, ஸ்ரீரெட்டி, சின்மயி உள்பட பலர், பிரபலங்கள் மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகையும், இந்தி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பூஜா மிஸ்ரா, பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், சத்ருஹன்சின்ஹா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அவர், சுல்தான் படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான்கான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்மட்டுமின்றி சத்ருஹன்சிங் உட்பட பலர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தந்தையை சல்மான்கான் குடும்பத்தினர்களும், சத்ருஹன்சின்ஹா குடும்பத்தினர்களும் கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய குற்றங்கள் நடந்துள்ளதாக கூறும் நடிகை பூஜா மிஸ்ரா, இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தாரா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்