சின்மயி சொல்வது அனைத்தும் உண்மை: நடிகை சமந்தா அதிரடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பாடகி சின்மயிக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்துக்கு சென்ற இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்திற்கான ஆதாரங்களை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா சின்மயி மற்றும் அவர் கணவர் ராகுலுக்கு ஆதரவு அளித்து டுவீட் செய்துள்ளார்.

அதில், டியர் ராகுல், சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! #istandwithchinmayi என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் சின்மயி பேச வேண்டும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியதை பார்த்த சமந்தா பதில் அளித்துள்ளார். அதில், ஏனென்றால் நாங்கள் பயந்துவிட்டோம். இது எங்களின் தவறு என்று நீங்கள் ஆக்கிவிடுவீர்கள் என்று என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்