96 படத்தில் நடித்த நடிகைக்கு வந்த சோதனை! அது எல்லாம் ஒன்றும் கிடையாது என புலம்பல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவான 96 என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோரின் பள்ளி பருவ கதாபாத்திரங்களாக நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யாபாஸ்கரும், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பள்ளி மாணவி கவுரி கிஷனும் நடித்திருந்தனர்.

சமீபத்தில் கவுரி கிஷனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதுமுக நடிகர் அதித்யா பாஸ்கர், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் சினிமாவிலும் நிஜத்திலும் பொறுத்தமான ஜோடி என்று கூறினர். இவர்களைப் பற்றி மீம்ஸ்கள் மற்றும் கிசுகிசுகள் பரவியது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த புதுமுக நடிகை கவுரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கும் ஆதித்யா பாஸ்கருக்கும் எந்த ஒரு உறவுமுறையும் இல்லை என்றும், அவரும், தானும் திரையில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்ததாகவும், அத்தோடு முடிந்து விட்டது என்றும் நிஜத்தில் காதலர்கள் இல்லை என்றும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

கவுரியின் பதிவை ரீடிவிட் செய்துள்ள நடிகர் ஆதித்யா பாஸ்கர், தானும் கவுரியும் சிறந்த நண்பர்கள் என்றும். தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்றும், சினிமா நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers