பிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வாட்ஸ்அப் தகவல்கள்! தமிழ் யூ டியூப் விமர்சகர் இவ்வளவு மோசமானவரா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

சினிமாவில் பிரபலங்கள் பலர் தைரியமாக எது நடந்தாலும் வெளியே சொல்லக் கூடியவர்கள். அந்த வரிசையில் பாடகி சின்மயியை கூறலாம்.

இவர் தன் மனதிற்கு தவறு என்று தெரிந்தால், அதை அப்போதே பேசும் தன்மை கொண்டவர்.

இந்நிலையில் இவர் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பிரபல் யூ டியூப் பிரபலம் பிரசாந்த் எனக்கு கருத்து ரீதியாக ஆதரவு தருவது போல் பேசி பாலியல் ரீதியாக பேசினார்.

டார்லிங் என்றும் ஸ்வீட் ஹார்ட் என்றும் அவர் வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினார். உடனடியாக நான் அவரை தவிர்த்துவிட்டேன். அதற்குப் பிறகு அவர் எனக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்து வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எனக்கும் பிரசாந்த் இப்படியான மெசேஜ்களை அனுப்பியுள்ளார் என்று பெண் ஒருவர் சின்மாயிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீங்கள் குறிப்பிடுபவர் என்னிடம் தவறான எண்ணத்தில் பேசியுள்ளார்.

நான் திருமணமானவள் என்றும், வயதில் மூத்தவள் என்றும் கூறி அவரை சகோதரர் என்று அழைத்தேன். அதற்கு அவர் சகோதரர் என்று அழைக்க வேண்டாமெனக்கூறி நான் அழகாக இருப்பதாக கூறினார்.

ஆரம்பத்தில் அவரை நான் செலிபிரிட்டி என்று நினைத்து பேசினேன். ஆனால் அவர் நல்ல குணம் படைத்தவரில்லை எனத் தெரியவந்ததும் அவரை தவிர்த்தேன் என்று கூறியுள்ளார்.

இதை நீங்கள் உங்களின் பக்கத்தில் பதிவிடவேண்டும் அப்போதுதான் அவரின் உண்மையான முகம் தெரியும் என்பெயரை வெளியிட வேண்டாம் என்று மெசெஜ் அனுப்பியுள்ளார். சின்மயி அந்தப் பெண்ணின் பெயரை வெளியிடாமல் அவர்களது மெசெஜ்களை மட்டும் வெளியிட்டார்.

இது குறித்து பிராசந்திடம் கேட்ட போது, து உண்மையில்லை, அப்படி நான் கூறியது உண்மையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers