தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி, தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
முன்னணி நடிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருப்பவர்.
இவர் சமீப நாட்களகாவே சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராகவும் தன்னுடைய குரலை ஒலித்து வருகிறார்.
இவருடைய வீடு கீழ்ப்பாக்கத்திலும், அலுவலகம் வளசரவாக்கத்திலும் அமைந்துள்ளது. அங்கு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக பல்வேறு பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சில நாட்களுக்கு முன்னர் விஜய்சேதுபதி, வருமான வரித் தாக்கல் செய்துள்ளார், அப்போது ஒரு சில ஆவணங்களை சமர்பிக்காமல் விட்டு விட்டதாகவும், அதனை வாங்கி கொண்டு செல்லவே அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்ததாகவும் விஜய் சேதுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களை சற்று நிம்மதியாக்கியுள்ளது.