பிரபல தயாரிப்பாளர் உடல்நலக் குறைவால் மரணம்

Report Print Kavitha in பொழுதுபோக்கு

வசந்த மலர்கள், சீமான், பூச்சூடவா ஆகிய பல்வேறு தமிழ் படங்களையும் தயாரித்த எம்.ஜி.சேகர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

76 வயதான இவர், உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார், அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

மேலும் எம்.ஜி.பிக்சர்ஸ் மூலம் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி, விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன், மம்மூட்டி நடித்த கிளிப்பேச்சு கேட்கவா, சத்யராஜ் நடித்த தாய்மாமன் மற்றும் சிவசக்தி ஆகிய வெற்றி படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்