பிக்பாஸ் வீட்டில் மனைவியிடம் வாயை கொடுத்து அசிங்கப்பட்ட செண்ட்ராயன்! அப்படி என்ன கேட்டார்?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த டேனியின் காதலியிடம் செண்ட்ராயன் கேட்ட கேள்வியால், அவர் தற்போது அசிங்கப்பட்டுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.

இப்படி வீட்டிற்கு வருபவர்கள் அனைவரிடமும் போட்டியாளரான செண்ட்ராயன் இன்றைய திகதி என்ன, நேரம் என்ன என்று அவர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார்.

உதாரணமாக விஸ்வரூபம் 2 குழு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபோது பூஜா குமாரிடம் இன்று என்ன டே என்று ஆங்கிலத்தில் சென்றாயன் கேட்க அவரோ குட்டே என்று பதிலளித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வீட்டிற்கு வந்த டேனியின் காதலியிடம் என்னைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று செண்ட்ராயன் கேட்டார்.

அதற்கு அவர், அண்ணா நீங்க எல்லோரிடமும் இதேயே கேட்கிறீர்களே என்று நோஸ் கட் செய்தார்.

இதனால் நேற்று வந்த தன் மனைவியிடம் நாள், திகதியைப் பற்றி கேட்காமல் வெளியே தனக்கு எப்படி பெயர் உள்ளது என்று கேட்டார்.

அவரோ அது எல்லாம் சொல்லக் கூடாது என்று உறுதியாக கூறினார். மனைவி என்பதால் மறைக்காமல் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்