நித்யாவை மாடிப்படியில் தள்ளிவிட்டு கதவுக்கு நெருப்பு வைத்த பாலாஜி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பாலாஜியின் நடவடிக்கையில் தற்போது நல்ல மாற்றம் தெரிகிறது, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திருத்திக்கொண்டு புது மனிதராக வெளியே வந்த பிறகு சில காலம் பார்த்துவிட்டுதான் எந்த முடிவையும் எடுப்பேன் என நித்யா கூறியுள்ளார்.

மறுபடியும் பாலாஜி பழையபடியே இருந்தா கண்டிப்பாக ஏத்துக்க மாட்டேன். நானும் மனுஷிதானே.

பாலாஜி ஒருமுறை பிக் பாஸில் அழுதது எனக்கு வேதனையாக இருந்தது. அவருடைய அப்பா இறந்தபோதுகூட துக்கத்தை மனசுலேயே வெச்சுக்கிட்டவர் பாலாஜி. ஒரு கண்ணீர் துளிகூட சிந்தவில்லை.

ஆனா, இப்போ எங்களை நினைச்சு அழும்போது உண்மையிலேயே என்னை அறியாம எனக்கு அழுகை வந்திடுச்சு.

அவர் என்னை மாடிப் படியிலிருந்து தள்ளிவிட்டது, வீட்டுக் கதவுக்கு நெருப்பு வெச்சது, போஷிகாகிட்ட நடந்துகிட்டது, இப்படிப் பல சம்பவங்கள் இப்போவும் வந்து வந்து போகுது. இதெல்லாம் இனியும் நடக்காம இருந்தா, போஷிகாவின் எதிர்காலம் கருதி நிச்சயம் அவருடன் வாழ யோசிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்