பிரபல நடிகை தேவையானியின் புகைப்படத்தால் குவியும் பாராட்டுகள்: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல நடிகை தேவையாணி வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு இருந்த நிலத்தை வாங்கி, அதை விவசாய நிலமாக மாற்றி அங்கு தன் குடும்பத்தினருடன் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போதுமான தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான விவசாய நிலங்கள் அனைத்தும் பிளாட்டுகள் போட்டு விற்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல நடிகை தேவையாணியின் புகைப்படம் விவசாயிகளின் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தேவையாணியின் கணவரான ராஜகுமாரன் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இதனால் அடிக்கடி அங்கு குடும்பத்தினருடன் தேவையாணி சென்று வரும் போது, அங்குள்ள தங்கள் விவசாய நிலங்களை பார்த்து வருவார்.

இந்நிலையில் அவர்கள் தோட்டத்திற்கு அருகே உள்ள விவசாயி ஒருவர் தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார்.

இதையறிந்த தேவையாணி அவரிடம் அந்த பிளாட்டுகளை வாங்கியுள்ளார். வாங்கிய பிளாட்டுகளை, விவசாய நிலமாக மாற்றியுள்ளார்.

தற்போது அந்த அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்ம் நிலையில், திருவிழாவிற்காக சமீபத்தில் தேவையாணி அங்கு சென்ற போது தோட்டத்தில் தன் குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தேவையாணி பிளாட்டுகளை விவசாய நிலமாக மாற்றியுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்