பிக்பாஸ் வீட்டில் நடந்த வார்த்தையால் விவரிக்க முடியாத தருணம்! கண்கலங்கிட்டேன் என செண்ட்ராயன் மனைவி உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நான்கு வருடமாக இதுக்குத் தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம், நாங்கள் கேட்காத பேச்சு இல்லை என்று நடிகர் செண்ட்ராயனின் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் பெற்றோர், மனைவி மற்றும் உறவினர்கள் சென்று வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் செண்ட்ராயனின் மனைவி பிக்பாஸ் வீட்டினுள் சென்று நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அவரிடம் கூறினார்.

உடனே மகிழ்ச்சியில் செண்ட்ராயன் துள்ளிக் குதித்தார்.

இது குறித்து செண்ட்ராயனின் மனைவியான கயல்விழி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார், இதற்காததான் நான்கு ஆண்டுகள் காத்திருந்தோம்.

நாங்க அனுபவிக்காத வலியெல்லாம் அனுபவித்தோம். கேட்காத வார்த்தைகளையெல்லாம் கேட்டோம். எங்கள் இருவரின் கனவும் நினைவாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அவர் முகத்தில் ஏற்படுகிற சந்தோஷத்தைப் பார்க்கத்தான் இதுநாள் வரை காத்துகிட்டு இருந்தேன்.

பிக்பாஸ் வீட்டிற்குள் என்னைத் தனியா அழைத்துச் சென்று, டாக்டர்கிட்ட செக் பண்ணியா, என்ன ஆச்சு, என்ன சொன்னார்னு கேள்வி மேல கேள்வியா கேட்டார்.

நான் பின்னர் சொல்றேன் என்று கூறினேன்.

ஆனா அவர் இன்னும் சிறிது நேரத்தில் உன்னை வெளிய போகச் சொல்லிடுவாங்க. அதனால் டாக்டர் என்ன சொன்னார்னு மட்டும் சொல்லுனு கேட்கவும் மனசு கேட்கல. விஷயத்தைச் சொல்லிட்டேன்.

நான் சொன்ன மறு நொடி, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, நான் அப்பாவாகிட்டேன்னு கத்தினார். எனக்கு அவர் கத்தின நொடி கண்ணு கலங்கிவிட்டது என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்