என்னுடன் நெருக்கமாக இருந்த திரைப்பிரபலங்களின் வீடியோ காட்சிகள் இதில் இடம் பெறும்! பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி

Report Print Santhan in பொழுதுபோக்கு

தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் திரைப்பிரபலங்கள் தன்னோடு நெருக்கமாக இருந்த போது, ரகசிய கமெரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம் பெறும் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

திரைப்பட நடிகையான ஸ்ரீரெட்டி வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் தம்மை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து தன்னுடன் நெருக்கமாக இருந்த நடிகர்கள் யார், அவர்களின் சுயரூபம் என்ன என்பதை ஊடகங்கள் முன் தெரிவித்தார்.

இந்நிலையில் இவர் ரெட்டி டைரி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். ரெட்டி டைரி படத்தில் நான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன்.

இந்த படத்தில் என்னுடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது ரகசிய கமெராவால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெறும்.

ரகசிய கமிரா மூலம் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் முறையாக அனுமதி பெறப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படம் குறித்து இயக்குனர் அலாவுதின் கூறுகையில், தித்தர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச்செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் தான் இப்படம், ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டம் குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படம்.

ஏற்கனவே இத்திரைப்படத்திற்கான காட்சிகள் ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகளை படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers