ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் இதுதானாம்! அவரே வெளியிட்ட தகவல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

உலக அழகி பட்டம் வென்றவரும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்போதும் தான் அழகாக இருக்கும் ரகசியத்தை உடைத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது, தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து ’குலாப் ஜாமுன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் உடற்பயிற்சி செய்வது இல்லை. இயற்கையாகவே என் உடல் இப்படி உள்ளது. எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி நல்லபடியாக உள்ளதால் எடை அதிகரிப்பது இல்லை.

நான் சுறுசுறுப்பானவள். அழகுக்காக நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை. என் அழகு இயற்கையானது. என் சுயசரிதையை எழுதுவது பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள். அது குறித்து நான் இதுவரை யோசிக்கவே இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers