என்னை தற்கொலை எண்ணத்தில் இருந்து காப்பாற்றியவர் இவர்கள் தான்! உண்மையை உடைத்த நடிகை கஸ்தூரி

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி தற்கொலை எண்ணத்தில் இருந்து என்னை காப்பாற்றியது இணையவாசிகள் தான் என்று கூறியுள்ளார்.

நடிகையான கஸ்தூரி 1990-ஆம் ஆண்டுகளில் மிகவும் பிசியான நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

தற்போது மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள கஸ்தூரி, சமூகவலைத்தளங்களில் பல கருத்துக்களை தெரிவித்து வருகி்றார்.

இந்நிலையில் நண்பர்கள் தினமான நேற்று இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஒரு காலத்தில் நான் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன். பலவற்றை இழந்தேன். உறவினர்கள் என்னை ஏமாற்றினார்கள். சிலர் நம்பிக்கை துரோகம் செய்தனர். வாழ்க்கை என்னை சோதித்தது.

மரணம் என்னைத் தூண்டியது. ஆனால் என் நண்பர்கள் எனக்கு துணை நின்றனர். நீங்கள்(நண்பர்கள்) எனக்காக செய்த விஷயங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் என் வாழ்க்கை சிதைந்திருந்தது. கடுமையான மன அழுத்தத்திலும் தற்கொலை உணர்விலும் இருந்தேன். நெட்டிசன்ஸ்களாகிய நீங்கள்தான் என்னை அந்த உணர்விலிருந்து மீட்டு வந்தீர்கள். உங்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்