பிரபல சினிமா கதாசிரியர் தற்கொலை

Report Print Trinity in பொழுதுபோக்கு
55Shares
55Shares
lankasrimarket.com

பிரபல பாலிவுட் கதாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

அப் தக் சாப்பான் படத்தின் கதாசிரியராக ரவிசங்கர் அலோக் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நானா படேகரின் படத்திற்கு பின்னர் பல பாலிவுட் படங்களில் கதாசிரியராக பணி புரிந்தவர் ரவிசங்கர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

நேற்று மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் மதியம் இரண்டு மணி அளவில் அவரது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார் ரவிசங்கர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்