நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ்: காரணம் என்ன

Report Print Kabilan in பொழுதுபோக்கு
60Shares
60Shares
ibctamil.com

நடிகர் தனுஷை தனது மகன் என்று, மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியர் கூறி வந்தனர். இந்நிலையில், கதிரேசன் நடிகர் வழக்கறிஞர் மூலம் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷை தங்களது மகன் என்று கூறி வழக்கு தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கதிரேசன் வழக்கறிஞர் மூலமாக, தனுஷுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘வழக்கு விசாரணையின் போது, நீங்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானதாகும்.

அதனால் எனக்கு நீதி மறுக்கப்பட்டது. எனவே, உங்களின் மீது ஏன் குற்றவியல் வழக்கு தொடரக்கூடாது?. நோட்டீஸுக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்