அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கமலின் மகள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
565Shares
565Shares
lankasrimarket.com

கவியரசர் கண்ணதாசனின் பேரன் திருமணத்தில் நடிகை ஸ்ருதி ஹசான், தனது காதலன் மைக்கேல் கார்சலுடன் தமிழ் பராம்பரிய முறைப்படி கலந்துகொண்டார்.

கமல்ஹசானின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், இங்கிலாந்து நடிகர் மைக்கேல் கார்சலை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், தனது காதலன் மற்றும் தாயுடன் சேர்ந்து மும்பையில் அவுட்டிங் சென்ற ஸ்ருதி தற்போது, திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது காதலனுடன் கலந்துகொண்டுள்ளார்.

ஆதவ் கண்ணதாசன்- வினோதினி திருமணத்தில் தமிழ் பராம்பரிய முறைப்படி, ஸ்ருதிஹாசனும், அவரது காதலனும் கலந்துகொண்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது.

இவர்களது, திருமணத்திற்கு கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்