நடுத்தெருவில் நிற்கப்போவது தயாரிப்பாளர்கள் தான்..மொத்தமாக தலையில் துண்டு: சேரன் ஆவேசம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
551Shares
551Shares
ibctamil.com

நடிகர் விஷால் தயாரிப்பாளர் நலன் கருதி தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான விஷால் திடீரென்று ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.

கமல் மற்றும் ரஜினி போன்றோர் இழுத்தடித்து கொண்டிருக்கும் நிலையில், விஷால் திடீரென்று தன்னுடைய அரசியல் பிரவேசத்தை துவங்கிவிட்டார்.

விஷாலின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சர்யத்தையும், திரைத்துறையினர் பலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு திரையுலகில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவுவதாக கூறப்படுகிறது.

விஷால் அறிவிப்பை வெளியிட்டதுமே சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், விஷால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படி பார்க்கிறீர்கள் அனுமதிப்பது சரியா என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சேரன் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், விஷாலின் இந்த முடிவால் நடுத்தெருவில் நிற்கப்போவது தயாரிப்பாளர்கள் தான் என்றும், இனி வரும் எந்த அரசிடமிருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை, மொத்தமாக தலையில் துண்டு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்