அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: நடிகை குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலை

Report Print Santhan in பொழுதுபோக்கு
2110Shares
2110Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

குஷ்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனது வீட்டில் எதிர்பாரதவிதமாக வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கணுக்காலில் காயம் எற்பட்டது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இது தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து குஷ்பு , காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து குஷ்பு கூறுகையில், கடந்த ஒரு மாதமாக கணுக்கால் வீக்கம் இருப்பதால் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதுமட்டுமின்றி வயிற்றில் ஏற்பட்ட சிறு கட்டிக்கு அறுவை சிகிச்சை தேவை என்று கூறியதால், அதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை வரும் 4-ஆம் திகதி செய்யவுள்ளதால், நவம்பர் 4,8,17 திகதிகளில் குஷ்பு பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்