ஜெயலலிதா, கருணாநிதிக்கு கடும் எச்சரிக்கை

Report Print Jubilee Jubilee in தேர்தல்

தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் இனிமேல் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளும் படி அதிமுக மற்றும் திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு கட்சியும் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று உறுதியளித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.

அதேபோல் அதிமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் ஸ்கூட்டருக்கு 50 சதவீதம் மானியம், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் கமிஷன் மே 14ம் திகதி அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ்க்கு இரு கட்சிகளும் விளக்கம் அளித்த நிலையில், தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது வெளியாகி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள அந்த உத்தரவில், அதிமுக தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக கூறியுள்ளது.

மேலும், சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதே போல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள திமுக தொடர்பான உத்தரவிலும் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக கூறியுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் இரு கட்சிகளும் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments