அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாய கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தெரிவு

Report Print Fathima Fathima in தேர்தல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாய கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன்  தெரிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரி கிளிண்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறுகிறது.

பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட 2383 பிரதிநிதிகள் வாக்குகளை பெறவேண்டும் என்ற நிலையில், தேவையான வாக்குகளை பெற்றதால் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments