“டிரம்ப் ஒரு சர்வாதிகாரி” பதிலடி கொடுத்த ஹிலாரி

Report Print Fathima Fathima in தேர்தல்
“டிரம்ப் ஒரு சர்வாதிகாரி” பதிலடி கொடுத்த ஹிலாரி

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த தேர்தலின் போது பேசிய டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஒரு திருடர் என குறிப்பிட்டார்.

மேலும் அவர்கள் மின்னஞ்சல் மூலம் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டுள்ளார் என குற்றம் சாட்டிய டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் நிறைந்த கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெறுவேன் என சவால் விட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஹிலாரி, டிரம்ப் ஒரு சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாகவும், தன்னை பற்றிய செய்திகள் வரவேண்டும் என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments