புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தெரிவு

Report Print Basu in தேர்தல்
புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தெரிவு

புதுச்சேரியில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இதுவரை 3 பேரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நாராயணசாமி ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்கும் நாள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments