வரலாற்றில் முதன்முறையாக...தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து

Report Print Basu in தேர்தல்
வரலாற்றில் முதன்முறையாக...தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் ஜூன்-13 ம் திகதி நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணம் தாராளமாக தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

அதன் காரணமாக இரு தொகுதிகளுக்கான தேர்தலையும் இப்போதைக்கு ரத்து செய்வதே சிறந்தது.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ரோசைய்யாவின் பரிந்துரையை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர்கள், மத்திய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் அளித்த அறிக்கையின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் திகதியில் மாற்றம்

தமிழகத்தின் தஞ்சை, அறவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் பணம் பட்டுவாடா நடந்ததால், அங்கு மே-23 ஆம் திகதிக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

பின்னர் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், ஜூன்-13 ஆம் திகதி இரண்டு தொகுதியிலும் தேர்தல் நடைபெறும் என உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல் மரணமடைந்தார்.

தற்போது அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளதால், தேர்தல் ஆணையம் மூன்று தொகுதிக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments