தேர்தல் வெற்றிக்கு அதிமுக பெருமை கொள்ள எதுவும் இல்லை: திருமாவளவன் தடாலடி பேட்டி

Report Print Peterson Peterson in தேர்தல்
தேர்தல் வெற்றிக்கு அதிமுக பெருமை கொள்ள எதுவும் இல்லை: திருமாவளவன் தடாலடி பேட்டி

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அதிமுக பெருமைக் கொள்ள எதுவும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடியாக பேசியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தொல்.திருமாவளவன் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், போட்டியின் இறுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான முருகமாறன் 48,450 வாக்குகள் பெற்று, அதாவது 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவனை தோற்கடித்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது திருமாவளவன் பேசியபோது, ‘விதிமுறைகளை தேர்தல் ஆணையம் முறையாக பின்பற்றாத காரணத்தினால் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அதிமுக ஒன்றும் பெருமைக் கொள்ள எதுவும் இல்லை. வாக்குகளுக்கு பணம் கொடுத்து அப்பாவி மக்கள் மீது கரை பூசிவிட்டனர்.

தேர்தலில் தோல்வியுற்ற நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நோக்கத்திற்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.

அதேபோல், அதிமுக அரசு அறிவித்துள்ளதுபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக மூட வேண்டும் என தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments