இயற்கையில் வெப்பமற்ற ஒளி உமிழும் உடலமைப்பைப் பெற்ற பூச்சி வகைகளில், மின்மினி பூச்சிகள் முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.
மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி( Cold light) உயர் ஒளி (Bioluminescence) என்று அழைக்கப்படுகின்றது.
இந்த ஒளி உமிழ்வின் போது வெப்பம் எதுவும் வெளியிடப்படுவதில்லை.
இவை தன் உடலில் சிக்கலானதொரு உயிர்வேதியியல் (Bio Chemical) முறையை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
இந்த பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு செல்கள் முழுக்க ஒளியை மட்டுமே தரும்.
இதில் Luciferin என்ற வேதிப்பொருள் இருக்கின்றது.
மின்மினியின் உடலுக்குள் வரும் காற்றுக் குழாயிலிருந்து ஒக்சிஜனை எடுத்துக்கொள்கின்றது.
பின் லூசிஃபெரினும்,ஒக்சிஜனும் லூசிஃபெரேஸ் என்ற நொதியினால் இணைந்து ஒக்சிலூசிஃபெரிலின் என்ற பொருளாக மாறுகிறது.
இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் உள்ள உயிர்வளி, உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP என்ற ரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும் போது ஒளி உண்டாகிறது என்று சொல்லப்படுகின்றது.