பல கண்டங்களை தாண்டி இடம்பெயரும் சிறிய பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்

Report Print Givitharan Givitharan in கல்வி

வெறும் 10 கிராம்களே நிறையுடைய பாடும் பறவையானது பல கண்டங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை கடந்து செல்கின்றது.

இதனிடையே அது எடுத்துக்கொள்ளும் ஓய்வு என்பது மிகச் சிறிது.

உண்மையில், பாடும் பறவைகளின் நிறையை ஒத்த பறவைகளில் சைபீரியன் வில்லோ வோர்ப்ளரே (Siberian willow warbler) அதிக தூரம் பயணிக்கும் பறவையாக சுவீடன் ஆய்வாளர்களால் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அவதானிப்பொன்றிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கென வடகிழக்கு ரஷ்யாவில் மூன்று ஆண் பாடும் பறவைகள் அவற்றின் தங்குமிடங்களிலிருந்து பின்தொடரப்பட்டிருந்தன.

இதன்போது இவை இலையுதிர் காலத்தில் 13,000 கிலோமீட்டர்களுக்கும் குறையாத தூரத்துக்கு நகர்வது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

கண்காணிப்பு கருவிகளின் மின்கலங்கள் தீர்ந்து போனதால் பயணம் முடிந்ததும் பறவைகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

ஆனாலும் இப் பாடும் பறவைகள் இதனிலும் அதிக தூரத்தைக் கடக்கக்கூடும் என ஆய்வாளர்களால் அனுமானிக்கப்படுகிறது.

12.5 சென்ரிமீட்டர்களே நீளமான இச்சிறிய பறவை ஆயிரக் கணக்கில் கிலோமீட்டர்களைக் கடப்பதென்பது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers