புறாக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்

Report Print Kavitha in கல்வி
307Shares
307Shares
ibctamil.com

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும்.

உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது.

இக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன.

இவை வெப்ப மண்டலக் காடுகளில் இவை அதிகம் வசிக்கின்றன அதாவது வெப்பப்புல்வெளிகள் (சவானாக்கள்), பிற புல்வெளிகள், சில பாலைவனங்கள், மிதவெப்ப மற்றும் சதுப்புநிலக் காடுகள் , வட்டப் பவளத்திட்டுகளில் உள்ள சரளை மற்றும் மலட்டு நிலங்கள் போன்றவற்றிலும் வசிக்கின்றன.

இது தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது.

நிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன.

பவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன.

பெரும்பாலும் இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன.

புறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்துக் கூடு கட்டி வாழ்கின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்