ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத மொழி

Report Print Jubilee Jubilee in கல்வி
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத மொழி

உயர்கல்வி மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழியை கற்பிக்குமாறு ஐ.ஐ.டி.,கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், உயர்கல்வியை மேம்படுத்த அமைக்கப்பட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு அண்மையில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், அறிவியல் தொடர்பான ஆயிரக்கணக்கான கருத்துகளும், சிந்தனைகளும் சமஸ்கிருத இலக்கியத்தில் செறிந்திருப்பதால் அந்த மொழிப்பாடத்தை உயர்கல்வி மாணவர்களுக்குகற்பிக்க பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, சமஸ்கிருத மொழியை கற்பிக்குமாறு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments