தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைகள் கடந்த 4ஆம் திகதியன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.