வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள இலங்கை மாணவன்

Report Print Sujitha Sri in கல்வி

இலங்கை மாணவரொருவர் வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என தெரிவித்து கொழும்பு ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு - பம்பலப்பிட்டி புனித பீற்றஸ் கல்லூரியில் கல்வி கற்று வரும் அகலங்க பீரிஸ் எனும் மாணவனுக்கே இவ்வாறாதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவிற்காக, இலங்கை நீச்சல் குழாமில் இடம்பிடித்து அந்த மாணவர் இந்தோனேசியா சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறித்த கொழும்பு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

தேசிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையால் இந்த மாணவன் வெளிநாட்டிலிருந்து பரீட்சை எழுதுவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்தோனேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் கணக்கியல், பொது அறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களினதும் பகுதி ஒன்றுக்கான வினா பத்திரங்களுக்கு அகலங்க விடையளிக்கவுள்ளார்.

இதற்காக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் இந்தோனேசியாவிற்கு செல்லவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers