கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவுகள்: வெளியான பட்டியல்

Report Print Santhan in நோய்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை படி நடந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகாலை

இஞ்சி, தோல் நீக்கப்படாத எலுமிச்சை பழத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வழங்கப்படுகிறது.

காலை

சப்பாத்தி, இட்லி, சம்பா கோதுமை உப்புமா, 2 முட்டை மற்றும் பால்

காலை 10 மணி

இஞ்சி, எலுமிச்சை சுடு தண்ணீர்

காலை 11 மணி

சாத்துக்குடி பழச்சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாலட்.

மதிய உணவு

சப்பாத்தி, புதினா சாதம், சாம்பார் சாதம், சாதத்துடன் இரண்டு வகையான பொறியல்

புலடங்காய், பீன்ஸ், கேரட், கீரை வகைகள், முட்டை, மிளகு ரசம், பொட்டுக்கடலை இவற்றினைக் கொடுத்து வருகின்றனர். மதிய வேளையில் முக்கியமாக பொட்டுக்கடலை, மிளகுரசம் முக்கியமாக கொடுக்கப்படுகின்றதாம்.

மாலை 3 மணி

மஞ்சள், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீருடன் சிறிது உப்பு கலந்து கொடுக்கின்றார்களாம்.

மாலை

பருப்பு ரசம், வேகவைத்து மூக்கடலையும் கொடுத்து வருகின்றனர்.

இரவு

ரவா உப்புமா, பீன்ஸ் கேரட் சேர்க்கப்பட்ட ரவா கிச்சடி, சப்பாத்தி அல்லது சேமியா, வெங்காய சட்னி, காய்கறி குருமா, பால்

இரவு 9 மணி

இஞ்சி, எலுமிச்சை சுடு நீர்

இரவு 11 மணி

மஞ்சள், மிளகு, சிறிது உப்பு போட்ட நீரும் வழங்கப்படுகின்றது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்