உடற்பயிற்சி அல்ஸைமர் நோயை கட்டுப்படுத்துமா?

Report Print Givitharan Givitharan in நோய்

அல்ஸைமர் நோய் என்பது ஒருவகை ஞாபக மறதியை தூண்டும் நோயாகும்.

உடற்பயிற்சி செய்வதன் ஊடாக இந்நோய் தாக்கத்தினை குறைத்துக்கொள்ள முடியும் என புதிய ஆய்வு ஒன்றினூடாக கண்டறியப்பட்டுள்ளது.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலுள்ள சவுத்வெஸ்டேர் மருத்துவ நிலையத்தின் விரிவுரையாளர் Rong Zhang என்பவரது தலைமையில் இந்த ஆய்வானது சுமார் ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக 55 வயதிற்கு மேற்பட்ட 70 நபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் அல்ஸைமர் நோய் தாக்கத்திலிருந்து விடுபட்டிருந்ததுடன், சிலர் குறித்த நோய்த் தாக்கத்தை பிற்போட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

பீட்டா அமிலோயிட் எனும் புரத வகை நச்சுத்தன்மையாக மாறுவதனால் மூளை பாதிக்கப்பட்டு அல்ஸைமர் நோய் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வாரம் ஒன்றிற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் உடற்பயிற்சி செய்தல் இப் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்