புற்றுநோய்க்கு எதிராக போராடும் 4 மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in நோய்

கடந்த தசாப்தங்களில் சில வகை புற்றுநோய்களுக்கு எதிராக பிளாட்டின மூலக்கூறுகள் பயன்படுத்தி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இம் மூலக்கூறுகள் விதைஉறுப்புக்களில் உண்டாகக்கூடிய புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனினும் உலோகங்களை அடிப்படையாகக் கெண்ட மாத்திரைகளை புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்துவருகின்றது.

காரணம் அவை நச்சுத்தன்மை அடையக்கூடிவை என்பதாகும்.

இப்படியிருக்கையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள RMIT பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 4 வகை தங்க மூலக்கூறுகளை புற்றுநோய் கலங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இவை புற்றுாநோய் கட்டிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடியவை எனவும் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்