சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்

Report Print Jayapradha in நோய்

குழந்தைகள் முதல் அனைவரையும் பாதிக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு முன் நம்முடைய வாழ்க்கை முறையில் சிலவற்றை மாற்றிக் கொண்டால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோய் ஏற்பட காரணம் என்ன?
  • கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தநிலை அல்லது ரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது, இந்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
  • அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து இல்லாத உணவை சாப்பிடுதல், மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது இது போன்ற பல காரணங்களினால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்?
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அதிக தாகம், சோர்வு நிலை மற்றும் பசி உணர்வுகள் ஏற்படும்.உடல் எடை இழக்கக்கூடும்.
  • கண் பார்வை மங்கும்.உடற்காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படும். அடிக்கடி நோய் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்படும். உள்ளங்கை மற்றும் பாதங்கள் மரத்துபோதல்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்க நாம் சில ஆரோக்கியமான உணவு வகைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்வதுடன், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
  • ஆயுர்வேதத்தின் படி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் மூலிகை சிகிச்சையாக தினமும் மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரையின் அளவை எளிதில் குறைக்கலாம்.
  • மேலும் தினமும் வேப்ப இலையை அரைத்து, ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் அது இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி, சர்க்கரை நோயை குறைக்கும்.
யோகா செய்வதன் மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா?
  • தினமும் யோகா செய்து வந்தால், ரத்தத்தின் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை மற்று சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும். யோகா செய்வதால், அது மன அழுத்தத்தைக் குறைத்து,இன்சுலின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
  • ஆசனப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் வயிற்று தசைகள் சுருங்கி, கணையம் மற்றும் இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புகளை குறைக்கிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்