அதிகளவில் உளநோய்க்கு ஆளாகும் பெண்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in நோய்

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது பெண்கள் அதிகளவில் உளநோய் அல்லது உளத்தாக்கத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 9,000 வரையானவர்களை வைத்து மேற்கொண்ட குறித்த ஆய்வின் முடிவில் நான்கில் ஒரு பெண் இவ்வாறு உளத்தாக்கத்திற்கு ஆளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் 17 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட பெண்களில் இத் தாக்கமானது ஏனைய வயதினரை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 5 தொடக்கம் 15 வயதிற்கு இடைப்பட்ட பெண்களில் ஒன்பதில் ஒருவரே இக் கோளாறுக்கு உட்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வினை தேசிய சுகாதார அமைப்பு (NHS) மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers