எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்? அதை எப்படி சரி செய்வது?

Report Print Jayapradha in நோய்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் இன்றியமையாதது. இந்த சத்துக்கள் குறைவதால் எலும்புகள் தேய்மானம் ஏற்படுகிறது.

எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் முழங்கால், இடுப்பு, கழுத்து, தோள், மணிக்கட்டு, முதுகில் திடீரென வலி ஏற்படும்.

எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எலும்பு தேய்மானம் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

எலும்பு தேய்மானம் ஏற்பட காரணம்
 • உடல் இயக்கமற்ற நிலையில் இருந்தால் ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுதான் எலும்பு தேய்வதற்கும், வலி ஏற்படுவதற்கும் முக்கிய காரணம்.
 • உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் தான் எலும்பு தேய்வு பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
 • எலும்புகளின் அடிக்கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பவை புரதங்களே. எலும்புக்கு வலு சேர்க்க்கும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளமால் இருந்தால் உலும்பு தேய்மானம் ஏற்படும்.
 • எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம், புகைபிடித்தல், மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் எலும்பு தேய்மானம் ஏற்படும்.
எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்க செய்ய வேண்டியவை
 • தினமும் உடற்பயற்சி செய்வதின் மூலம் எலும்புகள் தன்மை மற்றும் அதன் உறுதியை பாதுகாக்க முடியும்.
 • நடை பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றை தவிர்க்கலாம். எனவே தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை பயற்சி செய்ய வேண்டும்
 • மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க செய்யுங்கள்.
 • பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்து கொள்வதால் தூக்கம் தடைபடுவதை தவிர்க்கலாம்.
 • கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
 • பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள். சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.
 • காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
 • புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
 • எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியினால் தோல் மூலம் உறிஞ்சப்படும். எனவே குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்