தாங்க முடியாத மூட்டு வலியை குணப்படுத்த இந்த பானத்தை குடியுங்கள்!

Report Print Jayapradha in நோய்

மூட்டு வலி வருவதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காமல் இருப்பது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.

மேலும் உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மூட்டு வலியால் அவஸ்தைபடுபவர்கள் தினமும் கீழே கொடுத்து இருக்கும் பானத்தை தினமும் பருகி வந்தால் விரைவில் மூட்டு வலியில் இருந்து குணமாக்கலாம்.

தேவையான பொருட்கள்

 • வெள்ளரிக்காய்- 1

 • கொத்து செலரி- 1

 • லெமன்- 1

 • இஞ்சி வேர்- தேவையான அளவு

செய்முறை

 • முதலில் மேல கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

 • பின் வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு அதில் பாதி லெமன் மற்றும் இஞ்சி வேரை பயன்படுத்தி நன்கு அரைத்தால் ஆரோக்கியமான ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை

 • இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் உங்கள் மூட்டு வலி வீக்கம் உடனடியாக குணமாகும். மேலும் முட்டு பிரச்சினை சரியாகும் வரை இந்த முறையை பின்பற்றுவது நல்லது.

நன்மைகள்

 • வெள்ளரிக்காயில் உள்ள சோடியம், கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மூட்டு வலியை குணப்படுத்தும்.

 • செலரி இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

 • எலுமிச்சை மூட்டுகளில் தேங்கும் யூரிக் உப்பை கரைக்கிறது. வீக்கங்களை குறைக்க எலுமிச்சை ஒரு அற்புத மருந்தாகும்.வலி நிவாரணியகவும் செயல்படுகிறது.

 • இஞ்சி வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை கலவையை தொடர்ந்து உட்கொள்ளும்போது மூட்டு வலி காணாமல் போகும்.

குறிப்பு

 • இந்த ஜூஸை குடிக்கும் போது சிறியதாக மூட்டுகளில் வலி ஏற்படும். இதற்கு காரணம் அங்கே தேங்கியுள்ள நச்சுக்களை இந்த ஜூஸ் வெளியேற்றுவதன் அறிகுறியாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers