உஷ்ணமான சூழ்நிலைகளில் இவை அதிகம் பரவும் வாய்ப்பு: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in நோய்

லண்டனில் மூட்டைப் பூச்சிகளின் தொற்று சூடான வானிலையால் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய வாரங்களில், லண்டனில் வெப்பநிலை 80 டிகிரி பரனைட்டுக்கு உயர்ந்துள்ளது. இங்குள்ள சராசரி பருவ வெப்பநிலை 60 - 70 டிகிரி பரனைட்.

இது தொடர்பாக கூறப்படுவது யாதெனில் உயர் வெப்பநிலைகள் இவ்வகை மூட்டைப் பூச்சிகளை 8 இல்லது 9 நாட்களில் இனம்பெருகச் செய்கின்றன. வழமையாக இதற்கு 18 - 21 நாட்கள் எடுக்கின்றன.

இது முற்றிலும் மிருக உடலில் வாழும் மண்ணிற பூச்சி. இது மனிதன் மற்றும் நாய், பூனை, பறவைகள், எலிகளில் வாழக்கூடியது.

இம் மூட்டைப் பூச்சியின் தாக்கம் 1990களில் இருந்து அறியப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்