மூலநோயினை குணப்படுத்த வேண்டுமா? இதோ எளிய தீர்வு

Report Print Jayapradha in நோய்

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ்.மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமே மூல நோய் எனப்படுகிறது.

மூல நோய் வருவதற்கு மிக முக்கிய காரணங்கள் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மூல நோய் அறிகுறிகள்
  • வலியுடன் மலம் கழித்தல் மற்றும் மலத்துடன் இரத்தம் சேர்ந்து வருதல். மலம் கழிக்கும் போதும் கழித்த பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி.
  • பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ மலக்குடல் வெளித்தள்ளுதல். சிலருக்கு வலி, எரிச்சலின்றி இரத்தம் மட்டும் அதிகம் போகும்.ஆசனவாயில் அரிப்பு ஏற்படும்.
மூல நோய் வராமல் தடுக்கும் முறைகள்
  • மலத்தை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கக்கூடாது. மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரம் மலம் கழிக்கவும்.
  • அதிகப்படியான காரம், மசாலா, அசைவ உணவு வகைகளை தவிர்கவும். தண்ணீர் நிறைய குடிக்கவும், நார்சத்து மிகுந்த உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ளவும்.
  • கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • நீண்ட நேரம் ஒரே இட்த்தில் அமர்வதை தவிர்க்கவும். தினம் ஒரு பழம் என்ற பழக்கம் மூலநோய்க்கு முடிவுகட்டும்.
  • சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை ஆசனவாயில் தடவ வேண்டும்.
  • ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்