உங்களுக்கு என்ன நோய்? முகத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்

Report Print Printha in நோய்
685Shares
685Shares
ibctamil.com

நம் முகத்தில் ஒருசில இடத்தில் மட்டும் பருக்கள் தோன்றுவது, சரும நிறம் மாறுவது, சருமம் தடித்தல் போன்ற சில அறிகுறிகளை வைத்து நமது உடலில் எந்த உறுப்பில் கோளாறு உள்ளது என்பதை அறியலாம்.

நெற்றி

நெற்றியில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால், அது சிறுநீரகப் பை மற்றும் சிறுகுடல் ஆகிய உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது. இதை தடுக்க அதிக நீர் குடிப்பதுடன், நன்றாக உறங்க வேண்டும்.

புருவங்கள் இடையில்

முருவங்களுக்கு இடையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், அது கல்லீரலில் உள்ள பாதிப்பின் அறிகுறியாகும். இதற்கு பசுமையான உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் தியானம், யோகாவை செய்ய வேண்டும்.

புருவங்கள்

இரண்டு புருவங்களிலும் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது சிறுநீரக் கோளாறு, இதய நலக் குறைபாடு போன்ற பிரச்சனையாக இருக்கலாம். இதற்கு காபி குடிப்பதை தவிர்த்து அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மூக்கு

மூக்கின் மீது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது வாய்வுத்தொல்லை, குமட்டல், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளாக இருக்கலாம். இதற்கு க்ரீன் டீ குடிக்க வேண்டும்.

கன்னங்கள்

கன்னங்களில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை குறிக்கிறது. இதற்கு தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வாய் மற்றும் கீழ் தாடை

வாய் மற்றும் கீழ் தாடையில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால், அது வயிறு தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். இதற்கு அதிக பழங்களை சாப்பிட வேண்டும்.

தாடை மற்றும் கழுத்து

தாடை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் அறிகுறிகள் ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படுகிறது. இதனால் அதிக உடல் வறட்சி உண்டாகும். இதற்கு காபி, மசாலா மற்றும் காரத்தை குறைத்து தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்