திருமணத்திற்கு முன்னர் நடிகை தீபிகா படுகோனே காதலித்த ஆண்கள் எத்தனை பேர்?

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் கடந்த ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இத்தாலியில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

சிறந்த நடிகையாக வலம் வந்த தீபிகா, ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் 4 ஆண்களை காதலித்து அவர்களுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

நிகார் பாண்டே

மொடலிங் செய்து வந்த நேரத்தில் நிகாருடன் தீபிகாவுக்கு நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது. பின்னர் தீபிகா பாலிவுட் உலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வரத்தொடங்கியதும், இவர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோடி. யுவராஜ் சிங் எந்த போட்டியில் விளையாடினாலும், அதனை காண்பதற்காக தீபிகா அங்கு சென்றுவிடுவார். இருவரும் பொது இடங்களில் அதிகமாக ஊர் சுற்றினர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டது.

நடிகர் ரன்பீர் கபூர்

2008ம் பச்னா ஏ ஹசீனோ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் ஜோடி சேர்ந்திருந்த தீபிகா படுகோனே உடன் நெருக்கமாக பழகினார் ரன்பீர் கபூர்.

ரன்பீர் - தீபிகா ஜோடி மீடியா கண்களில் பெரும் ஈர்ப்பை பெற்றது.

அப்போது மீடியாக்களில் பெரிதும் பேசப்பட்ட காதலர்கள் இவர்கள் தான். ஏறத்தாழ இருவரும் நிச்சயம் செய்துக் கொள்வார்கள் என்று எண்ணி காத்திருந்த போதுதான் ஒரே வருடத்தில் இந்த காதல் கதை முற்று பெற்றது.

சித்தார்த் மல்லையா

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. ராயல் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்த விஜய் மல்லையா, அதன் விளம்பர தூதுவராக தீபிகாவை நியமித்தார்.

இதன் மூலம், இவரது மகன் சித்தார்த்துக்கும், தீபிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் சுற்றத்திரிந்தனர். முன்னாள் காதலர்கள் போலவே, சித்தார்த்துடனான காதலும் முடிவுக்கு வந்தது.

அதன்பிறகுதான், தீபிகா தன்னுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள ரன்வீருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers