இந்திய அணியில் அவர் இல்லாதது...அவுஸ்திரேலியாவுக்கே சாதகம்! வெற்றி சுலபம என சீண்டும் பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்
695Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் கோஹ்லி நாடு திரும்பவுள்ள, இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் லஸ்டின் லாங்கர், வெற்றி சுலபம் என்று கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் கொண்டு, அங்கு மூன்று வித தொடர்ப்களில் விளையாடவுள்ளது.

இந்த தொடர்களின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைத் தொடர்ந்து, கோஹ்லி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியோடு இந்தியா திரும்பவுள்ளார்.

ஏனெனில், மனைவியான அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டியோ நாடு திரும்பிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது குறித்து அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்ட்டின் லாங்கர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை கோஹ்லி தலைசிறந்த வீரர்.

அவரின் ஆட்டம் தனித்துவம் வாய்ந்த வகையில் இருக்கிறது. துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல, பீல்டிங் செய்யும் போதும் அவரின் உடல் சக்தி வியக்கத்தக்க வகையில் உள்ளது. தற்காலத்தில், மற்ற வீரர்களை விட கோஹ்லி, சுறுசுறுப்புடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

அவரின் இந்த தனிப்பட்ட முடிவை நான் மதிக்கிறேன். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவுஸ்திரேலியாவின் வெற்றி சுலபமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்