ரோகித்சர்மாவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்? முதன் முறையாக உண்மையை உடைத்த கங்குலி

Report Print Santhan in கிரிக்கெட்
1940Shares

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் ரோகித்சர்மாவை ஏன் தெரிவு செய்யவில்லை என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்கான இந்திய வீரர்களின் அறிவிப்பில் ரோகித்சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை, அவர் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின் ரோகித்சர்மா தொடர்ந்து மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்ததால், ரோகித்சர்மா திட்டமிட்டு தூக்கப்பட்டுள்ளதாகவும், கோஹ்லியின் சதியால் தான் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், வீரர்களின் காயம் குறித்த விவரங்கள் பிசிசிஐக்கும், பிசியோவுக்கும், NCAவுக்கும் மட்டுமே தெரியும். பிசிசிஐ எப்படி இயங்குகிறது என யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காயம் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் பேசி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின்போது இந்திய பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் துபாயில் தான் தங்கியிருந்தனர். சாஹா டெஸ்ட் தொடரில் தான் விளையாட உள்ளார். அதற்குள் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்