பசியால் தவித்த விலங்களுக்கு குடும்பத்துடன் தேடிச் சென்று உணவளித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! குவியும் பாராட்டுக்கள்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவின் தொடக்க துடுப்பாட்டகாரரான ஷிகர் தவான், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது மகன் ஜோராவருடன் பசியால் தவித்த விலங்குகளுக்கு உணவளிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். நல்லுள்ளம் கொண்ட பலர் விலங்களுக்கு உணவளித்து வருகின்றன.

அந்த நல்லுள்ளம் கொண்டவர்களில் தானும் ஒருவர் என நிரூபித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தவான்.

தவானும், அவரது மகன் ஜோராவரும் விலங்களுக்கு உணவளிக்கும் காட்சியை அவரது மனைவி ஈஷா படமெடுத்துள்ளார்.

தனது மகனுக்கு வாழ்க்கையின் உண்மையான மதிப்புகளை கற்பிப்பது முக்கியம் என்றும், இந்த சோதனை காலங்களில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் தங்கள் பங்கைச் செய்யுமாறு தனது ரசிகர்களை தவான் கேட்டுக்கொண்டார்.

வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் தவான் பதிவிட்டதாவது, ஒரு தந்தையாக, என் மகனுக்கு வாழ்க்கையின் உண்மையான மதிப்புகளைக் கற்பிப்பது மிகவும் முக்கியம், அவற்றில் ஒன்று மற்றவர்களிடம், குறிப்பாக தேவைப்படுபவர்களிடம் கருணை காட்ட வேண்டும்.

இந்த கடினமான காலங்களில் பசியுள்ள விலங்குகளுக்கு உணவளிப்பது முக்கியம், என் மகனுக்கு இதுபோன்ற ஆழமான பாடங்களை கற்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.. எல்லோரும் தங்களால் முடிந்ததை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக என்று தவான் கூறியுள்ளார்.

தவானின் செயலை பாராட்டிய முதல் கிரிக்கெட் வீரர்களில் மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒருவர்.எஇடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் தவானின் செயலை பாராட்டினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்