அச்சு அசல் அப்படியே இருக்கே... கோஹ்லியின் பெங்களூரு அணி லோகோவை கிண்டல் செய்த பும்ரா!

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் லோகோ மாற்றப்பட்டுள்ள நிலையில், இது நான் பந்து வீசும் ஆக்‌ஷன் போன்று உள்ளதே என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கிண்டலடித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை.

அதுமட்டுமின்றி அந்தணி பிளே ஆப் சுற்றுக்கு கூட அதிகம் வந்ததில்லை.

கோஹ்லி, டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இருந்தும், பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும் இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று உறுதியில் பெங்களூரு இருக்கிறது.

அதில், முதல் படியாக தன்னுடைய அணியின் லோகோவை மாற்றியது. இந்த லோகோவில் சிங்கத்தின் படத்தின் 2 கைகளைத் தூக்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. இதனை பார்த்த ஜஸ்ப்ரிட் பும்ரா நான் பந்துவீசும் ஆக்சன் போல் உள்ளது என்று கிண்டலடித்துள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்களும் உண்மையில் அப்படி தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்