2 மாதத்தில் 2 இரட்டை சதம்..! பட்டையை கிளப்பும் ராகுல் டிராவிட்டின் மகன்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் பி.டி.ஆர் ஷீல்ட் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் வெறும் 146 பந்துகளில் 204 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற பி.டி.ஆர் ஷீல்ட் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் குரூப் I, பிரிவு II போட்டியில் மல்லையா அதிதி இன்டர்நேஷல்- ஸ்ரீ குமரன் சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளிகள் மோதின.

மல்லையா அதிதி இன்டர்நேஷல் பள்ளி அணியில் விளையாடி ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இரட்டை சதம் அடித்து தனது திறமையைக் காட்டினார்.

சமித் டிராவிட் வெறும் 146 பந்துகளில் 33 பவுண்டரிகளை விளாசி தனது இரட்டை சத்ததை அடித்தார். இரண்டு மாதங்களுக்குள் அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும்.

சமித்தின் அதிரடியால் மல்லையா அதிதி இன்டர்நேஷல் பள்ளி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 377 ஓட்டங்கள் எடுத்தது.

378 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்ரீ குமரன் சில்ட்ரன்ஸ் அகாடமி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தத. சமித்தின் அணி 267 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2019 டிசம்பரில், 14 வயதுக்குட்பட்ட போட்டியில் தர்வாட் மண்டலத்திற்கு எதிராக துணைத் ஜனாதிபதி லெவன் அணியில் விளையாடிய சமித் 201 ஓட்டங்கள் எடுத்திருந்தார் என்பது குிறப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்