உலகக்கோப்பை தொடரில் மீண்டும் களமிறங்கும் தில்ஷன், சமீந்த வாஸ் உள்ளிட்ட இலங்கை ஜாம்பவான்கள்! முழு விபரம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 வீதிப் பாதுகாப்பு உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் நிலையில் முன்னாள் வீரர்களும், ஜாம்பவான்களும் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள்.

திலகரத்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லேஜண்ட் அணியில் முன்னாள் ஜாம்பவான்களான டி.விஜேசிங்க, சாமர கப்புகெதர, சமிந்த வாஸ், மெளரூப், மாவன் அத்தபத்து, முரளிதரன், ரங்கன ஹெரத், ரோஷான் களுவிதாரன, சேனாநாயக்க, துஷார, கண்டம்பி மற்றும் உபுல் சந்தன ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அதே போல இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஐந்து அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு பட்டியல்,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்