ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் டோனி இணையும் திகதி குறித்த தகவல் வெளியானது! உற்சாகத்தில் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்
150Shares

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக, சென்னை அணித் தலைவர் டோனி, மார்ச் 1ஆம் திகதி அணியில் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 29ஆம் திகதி தொடங்கவுள்ளது.

மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவராக மீண்டும் களமிறங்கவுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக டோனி மார்ச் 1ஆம் திகதி அணியில் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், ஏற்கனவே சென்னையில் பயிற்சியை தொடங்கிய நிலையில், சி.எஸ்.கே. அணி வட்டாரம், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மார்ச் 1ம் திகதி சென்னை வரும் தோனி, 2 முதல் 3 வாரம் பயிற்சி மேற்கொள்வார் என்றும், பின்னர் சொந்த ஊர் செல்லும் அவர், போட்டி தொடங்கும் முன்பாக அணியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக்கோப்பை தொடருக்கு பின், டோனி இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்